தா.பாண்டியன் மீது ஜெ. கோபம் - சந்திப்பை ரத்து செய்தார்
சென்னை: விடுதலைப் புலிகள், தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசியதால் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் மீது ஜெயலலிதா கோபத்துடன் இருக்கிறார். இதனால், சந்திக்க நேரம் தா.பாண்டியனை சந்திக்க அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் இடதுசாரிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம், தேசிய அளவில் இடதுசாரிகள் பல்வேறு கட்சிகளை இணைத்து பிரமாண்ட கூட்டணியை அமைத்து வருகின்றன.
இந்த அணியில், தெலுங்கு தேசம், தெலுங்கான ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளி்ட்ட பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவையும் தேசிய அளவிலான இந்த 3வது அணியில் இணைக்க இடதுசாரிகள் முயன்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளதாகக் கூறினார்.
மேலும் ஓரிரு நாளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து திங்கள்கிழமை அவர் ஜெயலலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த சந்திப்பை ஜெயலலிதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற ஜெயலலிதாவின் கருத்துக்கு தா. பாண்டியன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவை சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்குவேன் எனவும் கூறினார்.
இதனால் தா.பாண்டியன் மீது ஜெயலலிதா கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் தா.பாண்டியனை சந்திக்க அவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும் விரைவி்ல் அவர் ஜெயலலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அவருடன் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.
இது பொதுவான சந்திப்பு, தேசிய, மாநில அளவிலான அரசியல் நிலை குறித்து விவாதித்தோம் என்று கூறினார் வரதராஜன்.
இருப்பினும் மக்களவைத் தேர்தலி்ல தமிழக்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் முக்கியமாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications