28 லாரிகளுக்கு தீ வைத்து நக்சலைட்கள் வெறியாட்டம்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த 28 லாரிகளை நக்சலைட்கள் தீயிட்டு கொளுத்தினர்.
தாண்டிவடா மாவட்டத்தை சேர்ந்த கிரந்துல் என்ற ஊரில் கே.ஏ.பப்பசந்த் கான்ட்ராக்ட் கம்பெனி உள்ளது.
நேற்று 400க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் இவரது கம்பெனிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களின் மொபைல் போன்களை பறித்து, வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
தாண்டிவடா எஸ்.பி. ராகுல் சர்மா கூறுகையில், நக்சலைட்டுகள் கான்ட்ராக்டரின் உறவினர்களை முதலில் மிரட்டியுள்ளனர். அதை தொடர்ந்து ஊழியர்களையும் மிரட்டி இருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த 24 வாகனங்களை தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர்.
அருகிலிருந்த எரிபொருள் கிடங்கு ஒன்றுக்கும் நெருப்பு வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதில் எரிபொருள் எதுவும் இல்லாததால் தப்பித்தது.
நக்சலைட்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்தவர்களின் மொபைல் போனை பறித்துள்ளனர். மற்றொரு பிரிவினர் நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மொபைல் போன்களை உரியவர்களிடம் கொடுத்துள்ளனர் என்றார் எஸ்.பி.
இதேபோல் காங்கர் மாவட்டத்தில் 30 பேர் கொண்ட இடதுசாரி நக்சலைட்கள் கும்பல் ஒன்று அங்கே ரோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications