மாருதி கார்களின் விலை திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர் மாருதி சுசுகி நிறுவனம், சில வாரங்களுக்கு முன் தனது அனைத்து கார்களுக்கும் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. விலையைக் குறைத்த அதே வேகத்தில் இப்போது சில மாடல்களுக்கு மட்டும் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த நவம்பரில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஏ ஸ்டார் வகைக் கார்களுக்கு ரூ.10 ஆயிரமும், ஸ்விப்ட் கார்களின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் கார்களின் விலை வீழ்ச்சியடைந்தும், உற்பத்தி குறைக்கப்பட்டும் வரும் நிலையில், ஜப்பான்-இந்திய கூட்டு நிறுவனமான மாருதி மட்டும் விலையை உயர்த்தி அதிர்ச்சியளித்துள்ளது!












Click it and Unblock the Notifications