ஹோட்டலில் வெறித் தாக்குதல் - சிவசேனா எம்.பி. கைது
மும்பை: மும்பையில் கடந்த வாரம் நட்சத்திர ஹோட்டல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராத் இன்று கைது செய்யப்பட்டார்.
மும்பை அந்தேரியில் உள்ல லலித் குரூப் இன்டர்கான்டினென்டல் என்ற நட்சத்திர ஹோட்டலில் ஜனவரி 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த வரவேற்பரை, சமையலறை ஆகியவற்றை அடித்து துவம்சம் செய்தனர். ஹோட்டல் நிர்வாகம் 21 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதைக் கண்டித்து இந்த தாக்குதல் நடந்தது.
ராஜ்யசபா சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத் தான் இதற்குத் தலைமை தாங்கி தாக்குதலை நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அவர் மீது சாகர் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் காக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இன்று சஞ்சய் ராத் கைது செய்யப்பட்டார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் செயல் ஆசிரியராக இருக்கிறார் ராத் என்பது குறிப்பிடத்தக்கது.
பான்டுப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ராத்தை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் தலையீட்டின் பேரில் ராத் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
