அந்தமானில் ஆளுநர் ஏற்றிய கொடி தலைகீழாக பறந்தது
போர்ட்பிளேர்: அந்தமானில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஏற்றிய தேசிய கொடி தலைகீழாக பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடந்தன.
1943ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்த மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றியதால் இப்பெயர் பெற்றது.
விழாவில் கவர்னர் லெப்டினன்ட் ஜெனரல் போபிந்தர் சிங் தேசிய கொடியை ஏற்றினார். கொடியை ஏற்றியவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. காவி நிறத்துக்கு பதிலாக தேசிய கொடியில் பச்சை நிறம் மேலே இருந்தது. தேசிய கொடி தலைகீழாக பறந்தது.
விழாவில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கொடி சரி செய்யப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் ராணுவ முன்னாள் அதிகாரியான ஆளுனர் போபிந்தர் சிங் மிகவும் வேதனை அடைந்ததாக ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications