கருணாநிதி இலங்கைக்கு வர வேண்டும்: அனந்தசங்கரி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளது போல, முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு வர வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண கருணாநிதி, ஜெயலலிதா, தமிழக தலைவர்கள் குழு வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளை சந்திக்கட்டும். அவர்கள் கூறும் தீர்வுகளைப் பரிசீலிக்க நாங்கள் தயார் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இதை ஏற்று கருணாநிதி இலங்கை வர வேண்டும் என அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும் தற்போது நடைபெறும் போர் குறித்தும் விடுதலைப் புலிகளும், அவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழகத்தை தவறாக வழி நடத்தி உண்மைகளை மறைக்கின்றனர்.

தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களை கொன்று அழிக்கும் இனப் படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் போராடுவது தவறானது; நியாயப்படுத்த முடியாதது.

இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அனந்தசங்கரி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+