தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளராக இருந்த கண்ணுசாமி சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்படுகிறார்.
பழங்குடியினர் நல கமிஷனர் மாலிக் பெரோஸ்கான் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை சிறப்பு செயலாளராக
மாற்றப்படுகிறார்.
தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் மற்றும் அரசு கேபிள் டி.வி. கழக தலைவர் டேவிதார் அந்த கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
அரசு கேபிள் டி.வி. கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றிய சி.உமாசங்கர் சிறுசேமிப்பு கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்த சித்தரஞ்சன் மோகன்தாஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக முன்பு பணியாற்றிய அர்ச்சனா பட்நாயக் தொழில் வளர்ச்சி கழக செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் இயக்குனராகவும் அவர் பதவி வகிப்பார்.
சிறுசேமிப்பு இயக்குநர் பி.இளங்கோ நகர்ப்புற நில உச்சவரம்பு, நகர்ப்புற நிலவரி இயக்குநராக மாற்றப்படுகிறார்.
நிலசீர்திருத்த இயக்குநர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு-நகர்ப்புற நிலவரி இயக்குநர் தேவராஜ் தேவ் நில சீர்திருத்த இயக்குநர் பொறுப்பை மட்டும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications