சட்ட மாணவர்கள் மருத்துவமனையில்; அங்கும் தொடரும் உண்ணாவிரதம்!
செங்கல்பட்டு: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குளுக்கோஸ் போன்றவற்றை ஏற்க மறுத்து மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 22ம் தேதி துவங்கினார்கள். இதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீதமுள்ள 8 மாணவர்கள் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என தெரிவித்தனர்.
இதையடுத்து உணணாவிரத இடத்துக்கு சென்ற போலீசார் 8 மாணவர்களையும் அலேக்காக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது சில மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் மாணவர்கள் சுய நினைவுக்கு வந்ததும், குளுகோஸ் குழாய்களை பிடுங்கி எறிந்து விட்டனர். சிகிச்சையை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications