தா.பாண்டியனுடன் ராமதாஸ் அவசர ஆலோசனை - இன்று முக்கிய முடிவு அறிவிப்பு
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலைமை மேலும் மோசமாகி வரும் பின்னணியில் நேற்று டாக்டர் ராமதாஸை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.நகர் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, மாநில துணை செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தாங்க முடியாத துக்க செய்தியாக உள்ளது. நேற்றும் இன்றும் வரும் செய்திகளை பொறுமையாக கேட்கமுடியவில்லை.
அதனால் ஏதாவது செய்ய வேண்டும், அமைதியாக இருக்க முடியாது என்பதால் ஒத்த கருத்துள்ள தலைவர்களை சந்தித்து என்ன செய்யலாம்? என டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசித்தேன். அவரும் ஆழ்ந்த வேதனையில்தான் இருக்கிறார்.
ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் புதன்கிழ மை சென்னையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரை கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications