பணவீக்கம் 5.64 சதவீதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பணவீக்கம் இரண்டாவது வாரமாக ஏறுமுகத்தில் உள்ளது. இந்த வாரம் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 5.60 சதவீதமாக இருந்தது.
இப்போது ஜனவரி 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி பணவீக்கம் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலேயே பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவி்ததுள்ளது.












Click it and Unblock the Notifications