ஐஸ்வர்யாவை இழுக்கிறது சமாஜ்வாடி - மாதேபுராவில் போட்டி?
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 முதல் மே 15ம் தேதிக்குள் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் ஜூரம் அனைத்து கட்சிகளையும் தொற்றி கொண்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, தனது ஸ்டார் பவரை காட்ட படு மும்முரமாக காய் நகர்த்தி வருகிறது. லக்னோ தொகுதியில் சஞ்சய் தத் அல்லது அவரது மனைவி மான்யதாவை நிறுத்த அது முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் ஐஸ்வர்யா ராயை, போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது பீகார் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஐஸ்வர்யாவை வைத்து ஓட்டை அள்ள அது திட்டமிட்டுள்ளது.
ஐஸ்வர்யா போட்டியிட வேண்டும் என்று அங்குள்ள அடிமட்டத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனராம்.
இதுகுறித்து அக்கட்சியின் பீகார் மாநில பாராளுமன்ற தேர்தல் குழு தலைவர் துள்சி சிங் கூறுகையில்,
ஐஸ்வர்யா மிகவும் பிரபலமான நடிகை. அவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவர்.
மாதேபுரா தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.
சர்ச்சைக்குரிய ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி பப்பு யாதவின் தொகுதியான இதில் ஐஸ்வர்யா போட்டியிட்டால் 2.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என அம்மாவட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அங்கத் யாதவ், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஐஸ்வர்யா பச்சனை வேட்பாளராக்கினால் லாலு பிரசாத் மற்றும் சரத் யாதவ் கட்சிகளை எளிதாக தோற்கடிக்கலாம் என எழுதியுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!













Click it and Unblock the Notifications