மேய்டாஸ் இயக்குநர் சந்தர் ஷீல் பன்சால் ராஜினாமா
ஹைதராபாத்: சர்ச்சைக்குரிய சத்யம் நிறுவனம் 'காலியாக' பிள்ளையார் சுழி போட்ட மேய்டாஸ் இன்பிரா நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் சந்தர் ஷீல் பன்சால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து அவசரம் அவசரமாக நரசிம்ம ராவ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேய்டாஸ் நிறுவனத்தில் மொத்தம் மூன்று இயக்குநர்கள். தேஜா ராஜு மற்றும் ஆர்.பி. ராஜு ஆகியோர் இருந்தனர். மூன்றாவது நபராக இருந்தவர்தான் பன்சால்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென ராஜினாமா செய்து விட்டார். கம்பெனிகள் சட்டப்படி, குறைந்தது மூன்று இயக்குநர்களாவது, இயக்குநர் குழுவில் இருக்க வேண்டும். இதனால் சிக்கலில் மாட்டிக் கொண்ட மேய்டாஸ் நிறுவனம் அவசரமாக தனது போர்டு கூட்டத்தைக் கூட்டியது.
அதில் கூடுதல் இயக்குநராக நரசிம்மராவ் நியமிக்கப்பட்டார். இயக்குநர் பதவியிலிருந்து விலகி விட்ட பன்சால், நிறுவனத்தின் போக்குவரத்து, எண்ணை மற்றும எரிவாயுப் பிரிவின் தலைவராக செயல்படுவார் என தேஜா ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு தனது மோசடியை பட்டவர்த்தனமாக தெரிவித்த நாள் முதல் இந்த தேஜா ராஜு அலுவலகம் பக்கமே வராமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆர்.பி. ராஜு ஒரு டாக்டர் ஆவார். இவருக்கு நிறுவனத்தை நடத்தக் கூடிய அளவுக்கு திறமை கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications