• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கூகுள் கொடுத்த வைரஸ் ஷாக்!

By Sridhar L
|

வாஷிங்டன்: சனிக்கிழமை கூகுள் கொடுத்த எச்சரிக்கையால் பல இணையதளங்கள் கூகுள் தேடியந்திரத்தில் திடீரென தெரியாமல் போயின. இதனால் இணையதளங்களை நடத்துவோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 3.25 மணிவரை, கூகுள் தேடி எந்திரத்தில் குறிப்பிட்ட தளங்களைத் தேடுவோர் பெரும் குழப்பத்துக்கு உள்ளானார்கள்.

காரணம் எந்த தளத்தைத் தேடித் திறந்தாலும், அந்த தளம் 'பெரும் ஆபத்தானது... வைரஸ் உள்ள தளம் (Warning! This site may harm your computer)' என்ற எச்சரிக்கையை கூகுள் அளிக்கவே, எதற்கு வம்பு என மூடிவிட்டனர் பயனாளர்கள்.

என்னதான் நடந்தது?

வழக்கமாக வைரஸ் மற்றும் ஆபத்து நிறைந்த வெப்சைட்டுகள் பற்றி கூகுளில் அப்டேட் செய்யும் ஒரு தளம் அளித்த தகவல்கள் தவறுதலாக ஏற்றப்பட்டு விட்டனவாம்.

இணைய தளங்களின் சுட்டியில் '/' என்ற குறியீடு கொண்ட அனைத்துத் தளங்களும் ஆபத்தானவை என்ற பொருள்படும்படி அப்டேட் செய்யப்பட்டு விட்டனவாம். ஆனால் இந்தக் குறியீடு அனைத்து தளத்துக்குமே பொதுவானது.

இந்தத் தவறு காரணமாகவே திடீரென அப்படி தோன்றியதாகவும், பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more