சத்யம் நிறுவனத்திற்காக புதிதாக ரூ. 2000 கோடி ஆர்டர்கள்
டெல்லி: ஊழல், மோசடி, நீதிமன்ற விவகாரங்களில் சிக்கித் திணறும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு, அரசுத் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து 40 கோடி டாலர் மதிப்பிற்கு (சுமார் ரூ.1,960 கோடி) ஆர்டர்கள் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஏற்கனவே உள்ள வாடிக்கை நிறுவனங்களும் தொடர்ந்து ஆர்டர்கள் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில வாடிக்கை நிறுவனங்கள் ஆர்டர்களின் அளவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற வாடிக்கை நிறுவனம், சத்யம் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சத்யம் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவையால் பம்பார்டியர் நிறுவனம் திருப்தி அடைந்துள்ளது. எனவே, சத்யம் நிறுவனத்துடன் கொண்டுள்ள தொடர்பு தொடர்ந்து நீடிக்கும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த நிலை நீடிக்குமா என்று தெரியவில்லை. காரணம், சத்யம் நிறுவனத்தின் நான்கு மிகப் பெரிய வாடிக்கை நிறுவனங்களான சிட்டி குரூப், மெரில்லிஞ்ச், நோவார்டிஸ் மற்றும் ஜி.எஸ்.கே. ஆகியவை வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்காக பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
சத்யம் நிறுவனத்தில் நிலவி வரும் குழப்பம் தொடர்ந்து நீடிக்குமானால், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு முழுமையாக மாற வாய்ப்புள்ளது என்று சத்யம் நிறுவன வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications