மலேசிய சிறையில் சிக்கி தவித்த தூத்துக்குடி வாலிபர் மீட்பு
தூத்துக்குடி: முறையான விசா இல்லாமல் மலேசிய சிறையில் சிக்கி தவித்த தமிழர் ஒருவர் அரசின் தலையீட்டை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சுரேஷ். இவர் ஐடிஐ படித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றார். அங்கு திவான் என்ற பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முறையான விசா இல்லாததால் சுரேசை மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சுரேஷ் தனது தாயார் மாரியம்மாளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.
இதையடுத்து மாரியம்மாள் தனது மகனை மீட்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராதிகா செல்வியை தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுரேஷை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ராதிகா செல்வி கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசிய சிறையில் இருந்து சுரேஷ் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து தூத்துக்குடி திரும்பிய சுரேஷ், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வியை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வித்தியசாகர் உடன் இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications