ஈழத் தமிழர்களுக்காக இருவர் தற்கொலைக்கு முயற்சி
கடலூர்: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். அதேபோல நெல்லை மாவட்டத்தி்ல் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன்.
அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லையில் தீக்குளிக்க முயன்றவர் கைது
அதேபோல, நெல்லை டவுண் பாட்டபத்தை சேர்ந்தவர் நடராஜன் என்ற கருணாநிதி. இவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் தமிழ் மீது பற்றுள்ளவர். இந்நிலையில் இன்று காலை டவுண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தன் மீது மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு இலங்கை தமிழர்கள் வாழ்க, சிங்கள அதிபர் ராஜபக்சே ஓழிக, இலங்கை தமிழர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசு ஓழிக என்று கோஷம் போட்டவாறு தீக்குச்சியை கொளுத்தி தீ வைக்க முயன்றார்.
ஆனால் போலீசார் பாய்ந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் குண்டுகட்டாக தூக்கி கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அங்கு அவரைக் கைது செய்தனர்.
மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications