ஐஏஇஏ-வுடன் இன்று பாதுகாப்பு அம்ச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
வியன்னா: சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியுடன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தில் இன்று இந்தியா கையெழுத்திடுகிறது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு அம்ச ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியுடன் ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் சவுரப் குமார் கையெழுத்திடுகிறார்.
அவருடன் தலைமை கலந்தாய்வாளர் ரவி குரோவர், அணுசக்தித்துறையின், வெளியுறவு விவகார பிரிவு இணை செயலர் கிதேஷ் சர்மா ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்திய அரசு ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் இந்திய-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கான முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் 45 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நியூக்ளியர் சப்ளையர் குரூப் (என்.எஸ்.ஜி,) என்ற அமைப்பிலிருந்து எரிபொருட்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களை இந்தியா எளிதில் பெற்று கொள்ள முடியும். இது தற்போது 40 சதவீத திறனுடன் இயங்கி கொண்டிருக்கும் இந்திய அணு உலைகளின் திறனை மேலும் அதிகரிக்க உதவும்.
ஒப்பந்தம் குறித்து சவுரப் குமார் கூறுகையில், இன்று வியன்னாவில் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறோம். இதை கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி 35 உறுப்பினர்களை கொண்ட சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியின் கவர்னர்கள் குழு அங்கீகரித்தது.
அமெரிக்காவுடனான கூடுதல் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கான திட்ட வரைவு தயாரிக்க தாமதமாகி வருகிறது. தயாரித்தவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.
இந்தியா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அணு சக்தி ஒப்பந்தங்கள் முழு அளவில் நடைமுறைக்கு வர, இன்று மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அணு உலைகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஐஏஇஏவுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications