வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்கள், ரயி்ல்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என டிஜிபி ஜெயின் கூறியுள்ளார்.

நாளை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்கள், ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அறிவிக்கப்பட்டு உள்ள முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களை பட்டியலிட்டு இருக்கிறோம். இந்தப் பகுதிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்படுவார்கள். பிரச்சினைக்கு உரிய இடங்களிலும் போலீசார் விரைந்து செல்ல வழிவகைகள் செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல காங்கிரஸ் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போராட்ட நடவடிக்கைகளை போலீசார் உடனடியாக முறியடிப்பார்கள்.

ரெயில், பஸ் போக்குவரத்துக்கு கொஞ்சமும் பாதிப்பு ஏற்படாது. அனைத்து போக்குவரத்தும் தடையில்லாமல் வழக்கம் போல் முழுமையாக இயங்கும். ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் டெப்போக்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள்.

அதுபோல் பிரச்சினைக்குரிய பகுதிகளில் ரெயில், பஸ்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு அன்று அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்படுவார்கள்.

அவர்களின் பெயரை பட்டியலிட்டு இருக்கிறோம் என்றார் அவர்.

தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் ...

முன்னதாக டிஜிபி ஜெயி்ன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்ட அறிவிப்பை ஒட்டி, புதன்கிழமையன்று மாநிலத்தில் குடிநீர், பால், மருத்துவம், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்காத வண்ணமும், பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் இடையூறு இல்லாமல் இயங்கவும், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், அங்காடிகள், தொழிற்சாலைகள் முதலியவை வழக்கம் போல் செயல்படவும் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் காவல் சட்டம் பிரிவு 30 (2) மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன் படி ஒழுங்குமுறை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்தை தடை செய்தல், அலுவலகங்கள் மற்றும் இதர பணிகளுக்கு செல்வோரை தடுத்தல், கடைகள், அங்காடிகள், பெட்ரோல் பங்குகள், தியேட்டர்கள் முதலியவற்றை மூட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு அடைப்பு அறிவிப்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சாலை மறியல்களில் ஈடுபடுதல், உருவ பொம்மைகளை எரித்தல், அரசு பஸ்கள் மற்றும் பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை உள்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என எச்சரித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+