சென்னைக்குப் பயிற்சிக்கு வந்த சிங்கள விமான படையினர்

இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது. தமிழர்களைக் குறி வைத்து இலங்கை படைகள் கடும் வேகத்தில் தாக்கி வருகின்றன.
விமானப்படை விமானங்கள் அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய விமானப்படை அதிகாரிகள், சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சி தருகிறார்கள். அதிலும் சென்னையில் வைத்து இந்தப் பயிற்சி நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமே இலங்கை அரசுக்கு எதிராக கொந்தளித்துப் போயுள்ள நிலையில், சிங்களப் படையினருக்கு தமிழகத்தின் தலைநகரில் வைத்து தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 8 சிங்கள வீரர்கள் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு 3 மாத பயிற்சி தரப்படும் எனத் தெரிகிறது.
இவர்கள் தங்களது காவல் நிலையத்தில் காட்டி பதிவு செய்வதற்காக நேற்று சேலையூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவரும் உடன் வந்தனர்.
சேலையூர் காவல் நிலையத்திற்கு இலங்கை விமானப்படையினர் வந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடினர். செய்தியாளர்களும் விரைந்து வந்தனர்.
துப்பாக்கியால் மிரட்டினர்
இலங்கை விமானப்படை வீரர்கள், சீருடையுடன், கையில் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியது.
அவர்களை சிலர் தங்களது செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளனர். அதைப் பார்த்த சிங்கள வீரர்கள் தங்களது கையில் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தமிழக கட்சிகள் கடுமையாக கூறி வரும் நிலையில், இன்று அதைக் கண்டித்து பந்த் நடைபெறவுள்ள நிலையில் சிங்களப் படையினர் தமிழகம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications