கோவில் நிலங்களை பாதுகாக்க கோரி இந்து முன்னணி உள்ளிருப்பு போராட்டம்!
கரூர்: கோவில் நிலங்களை பாதுகாக்க கோரி தாந்தோனி மலை கோவிலின் உள்ளே இந்து முன்ணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று தாந்தோனிமலை. இந்த கோவிலுக்கு தென் திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் உள்ளது. அந்த நிலங்களில் உள்ளோர் மிக குறைந்த வாடகை கொடுத்து விட்டு அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அரசியல்வாதிகள் உதவியுடன் கோவில் நிலத்தை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் தாந்தோனிமலை கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தின் உள்ளே இந்து முன்னணி மாவட்டத் தலைவர் வக்கீல் செந்தில்குமார், செயலாளர் சுருளிராஜன், நிர்வாகிகள் அருண்ணாசலம் மற்றும் நிர்வாகிகள் சிலர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கோவில் சூப்பிரெண்டு நரசிம்மராகவன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில், கோவலிலுக்கு சொந்தமான நிலங்களின் பட்டியலை வெளியிட 3 மாத கால அவகாசம் , மற்றும் கோவில் நிலத்தின் பத்திர பதிவுகள் அனைத்தும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அனு்பபி வைக்க வேண்டும் என்றும், கோவில் நிலம் பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications