நெல்லையப்பர் கோவில் தங்கருக்கு செப்புத் தகடு பூசும் பணி தீவிரம்
நெல்லை: நெல்லையப்பர் கோவில் தங்க தேருக்கு செப்பு தகடு பொருத்து பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லையப்பர் கோயிலுக்கு அதன் உபயதாரர் மூலம் 10 கிலோ தங்கத்தில் தங்க தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அறநிலையதுறை அனு்மதியும் பெறப்பட்டது. பழனி் கோயிலில் உள்ள தங்க தேர் வடிவில் பன்னிரென்டே முக்கால் அடி உயரத்திலும், 8 அடி அகலத்திலும் தேர் செய்யப்படுகிறது.
தேர் திருப்பணி துவங்கி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 4 கிலோ 200 கிராம் தங்கம் பெறப்பட்டுள்ளது. தேருக்கான மரவேலைப்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டது. தற்போது தேரில் செப்பு தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மார்ச் மாதம் முடிவடையும்.
இதையடுத்து தங்க தகடுகள் பதிக்கும் பணி துவங்கும். கோயில் தல வரலாற்றை கூறும் வகையில் தங்க தகடுகள் செய்யப்பட்டு பதிக்கப்படும். குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த ஸ்தபதி கல்யாண சுந்தரம் தங்க தேரை வடிவமைத்து வருகிறார்












Click it and Unblock the Notifications