ஆட் குறைப்பில் இறங்கிய ஹட்ஸன் பே, பானாசோனிக்
டொரண்டோ: உலகின் மிகப் பழமையான டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எனப்படும் ஹட்ஸன் பே கம்பெனியும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது.
நிதி நெருக்கடி மற்றும் விற்பனை மந்தம் காரணமாக தனது ஊழியர்களில் 1000 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளது ஹட்ஸன் பே.
இந்த ஆட்குறைப்பின் மூலம் 150 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என்றும், நிறுவனத்தை இந்த நெருக்கடியில் மூடாமல் காக்க இதுவே வழி என்கிறார்கள் இந்த நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் ஷெர்மன்.
1670-ம் ஆண்டு அன்றைய ராயல் பிரிட்டிஷ் சட்டப்படி உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. பல டிபார்ட்மெண்டர் ஸ்டோர்களை முதன்முதலில் உருவாக்கிப் புகழ்பெற்றது.
பானாசோனிக் பகீர்:
இன்னொரு பக்கம் உலகப் புகழ் பெற்ற எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக் 20 ஆயிரம் பணியாளர்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் 27 கிளைத் தொழிற்சாலைகளையும் மூடுதாகவும் அறிவித்துள்ளது.
உலகம் முழுக்க இந்நிறுவனத்தின் கிளைகளில் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது பானாசோனிக்.


Click it and Unblock the Notifications
