போர் நிறுத்தம் கோரி சென்னையில் 10ம் தேதி பொதுக்கூட்டம்
சென்னை: சென்னையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி வருகிற 10ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில், டாக்டர் ராமதாஸ், வைகோ, தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், ஆர். நல்லகண்ணு, பாஜக பொதுச்செயலர் தமிழிசை செளந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவுகள் குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி எங்கள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நமது உணர்வுகளை வெளிப்படுத்துவது ஜனநாயக ரீதியிலான உரிமை. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அதன் பிறகும்கூட மிக அமைதியாக, ஜனநாயக நெறிகளுக்கு உள்பட்டு, போராடிய எங்கள் அமைப்பினர் பலர் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஏற்கெனவே அறிவித்தபடி எங்கள் அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை கறுப்புக் கொடி பேரணி நடத்தப்படும். பேரணியின் இறுதியில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் வகையில் சூளுரை மேற்கொள்ளப்படும்.
பேரணியில் அனைவரும் கறுப்புக் கொடிகளை மட்டுமே எடுத்து வர வேண்டும். எவ்வித அசம்பாவிதமும் இன்றி பேரணிகள் மிக அமைதியாக நடத்தப்பட வேண்டும்.
முத்துக்குமார் அஸ்தி ஊர்வலம்
இலங்கைத் தமிழர்களுக்காக தன் இன்னுயிரை ஈந்த இளைஞர் முத்துக்குமாருக்கு மக்கள் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவரது அஸ்தி கலசங்கள் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். இந் நிகழ்ச்சிகள் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இறுதியில் சென்னை, பூம்புகார், ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பவானி, முக்கூடல் ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்படும்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், எங்கள் அமைப்பின் நோக்கங்களை விளக்கியும் வரும் 10-ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வது என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதிதான் முன்மொழிந்தார்.
அதுபோல் சட்டப்பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, தில்லி பயணம் என அவர் மேற்கொண்ட எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருந்தோம்.
அதன் பிறகும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை.
முதல்வரையும் அழைத்தோம்
எனவேதான் நாங்கள் இந்த அமைப்பை ஏற்படுத்தினோம். எங்கள் அமைப்பின் கூட்டத்துக்கு முதல்வர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினோம். ஆனால் நாங்கள் அழைக்கவில்லை என முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என்றார் நெடுமாறன்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications