கட்சித் தலைவர்களை தலைமைச் செயலாளர் மிரட்டுவதா வைகோ கண்டனம்
சென்னை: பந்த்தில் ஈடுபடக் கூடாது என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி எச்சரிக்கை விடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
பிப்ரவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் வேலைநிறுத்தம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.
அன்றிரவு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் பொது வேலைநிறுத்தம் சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் இலங்கையில் இருதரப்பும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டறிக்கை விட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மதத் தலைவரான போப் 16-வது பெனடிக்ட் இன்று அதிகாலை இலங்கையில் இருதரப்பும் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியா இந்த விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறது என்று கேள்வி கேட்கின்றனர்.
இந்திய அரசு இந்த விஷயத்தில் ஒப்புக்குக் கூட போர் நிறுத்தம் கோராதது ஏன்? இந்தியா போர் நிறுத்தம் கோரினால் பல உலக நாடுகளும் இலங்கையில் போர் நிறுத்தம் கோருவதற்குத் தயாராக உள்ளன.
இந்திய அரசை பணிய வைக்கும் போராட்டங்களில் நாம் இறங்க வேண்டும். பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள கருப்புக் கொடி ஊர்வலத்தில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார் வைகோ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications