கேரள எம்எல்ஏ மகளை தாக்கிய ஸ்ரீராம் சேனா
மங்களூர்: கேரள சிபிஎம் எம்.எல்.ஏ.வின் மகளை ஸ்ரீராம் சேனா அமைப்பினர் மங்களூரில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் குன்னாம்பு. இவர் சிபிஎம் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகள் ஸ்ருதி.
மங்களூரில் தங்கி அங்குள்ள செயின்ட் அலோய்சியஸ் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார் ஸ்ருதி.
நேற்று ஸ்ருதியும், அவருடன் படிக்கும் தோழியின் சகோதரருமான ஷாபீபுடன் பஸ்சில் போய்க் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கும்பல் திடீரென பஸ்சை மறித்து நிறுத்தியது. பின்னர் உள்ளே ஏறி ஸ்ருதியையும், அவருடன் வந்த வாலிபரையும் கட்டாயப்படுத்தி கீழே இறக்கியது.
இருவரையும் ஆட்டோ ஒன்றில் ஏற்றி கொண்டு அக்கும்பல் பின்னர் இருவரையும் விடுவித்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷாபிப் காசர்கோட்டில் உள்ள தனது வீட்டுக்குப் போய் விட்டார். ஸ்ருதி, மங்களூரில் தான் தங்கியுள்ள உறவினரின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸாரிடம் ஸ்ருதி கொடுத்த புகாரில் தன்னுடன் வந்த ஷாபிப், முஸ்லீம் என்பதால் அக்கும்பல் ஆத்திரமடைந்து தங்களைக் கடத்தி்ச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில்தான் மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து ஸ்ரீராம் சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில்,தற்போது எம்.எல்.ஏ.வின் மகளைக் கடத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் தந்தை குன்னாம்பு
கூறுகையில், இதற்கு ஸ்ரீராம் சேனாவினர்தான் காரணம்.
அவர்கள் தவிர பஜ்ரங் தளத்தினருக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனது மகளுடன் சென்ற பையன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன். இருவரும் விடுமுறை ஒரே கல்லூரியில் படிப்பவர்கள், விடுமுறை முடிந்து கல்லூரியில் சேருவதற்காக போய்க் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த பஸ்சின் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள்தான், இந்த குண்டர் படையினருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து எனது மகளை கடத்தச் செய்துள்ளனர் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications