மதுரை காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன். இவரது சொந்த ஊர் சிவகங்கை. இவருக்கு மதுரை கே.கே.நகரில் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று அதிகாலை, கே.கே.நகர் வீடு மற்றும் அலுவலகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
மேலும் வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கொடிக் கம்பத்தையும் விஷமிகள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
இந்தத் தகவல் உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்குச் சென்றது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டுக்குப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
நேற்று அதிகாலையில் சென்னையில் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை, சுதர்சன நாச்சியப்பனின் வீடு தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications