எஸ்.வி.சேகர் தொடங்கும் பிராமணர் கூட்டமைப்பு
சென்னை: அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி. சேகர் தென்னக பிராமணர் சங்க கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை இன்று துவக்குகிறார்.
இந்த அமைப்பு பிராமணர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தவுள்ளது. இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். ஏழை பிராமணர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகமாகிக் கொண்டே உள்ளது.
பிராமணர்கள் வம்பு, மதக் கலவரம், சாதிக் கலவரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு இலவச கலர் டி.வி. கூட கிடைப்பதில்லை. பிராமண சமூகத்தினரின் கல்வி, வேலை வாய்ப்பு சதவீதம் குறைந்து விட்டது.
ஈமச்சடங்கு செய்யும் ஏழை பிராமணர்கள் உயர் வகுப்பில் பிறந்ததற்காக சமூக நீதி மறுக்கப்பட்டு வாழுகிறார்கள். அவர்களுக்காக போராடவே இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.
பிராமணர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்துவோம். பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் இப்படியொரு சமுதாயம் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விடும் என்றார்.
-
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!











Click it and Unblock the Notifications