ஏ.க்யூ. கான் விடுதலை: அமெரிக்கா எதி்ர்ப்பு

Subscribe to Oneindia Tamil

AQ Khan
வாஷிங்டன்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணு குண்டின் தந்தை என்றழைக்கப்படுபவர் விஞ்ஞானி அப்துல் ஏ.க்யூ. கான். ஈரான், வடகொரியா, உள்ளிட்ட நாடுகளுக்கு அணு குண்டு ரகசியங்களை விற்றதற்காகவும், அணு குண்டு தயாரிக்க உதவும் கருவிகளை விற்றதற்காகவும் கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டு வீட்டு காவல் முடிந்து நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரி ஹிலாரி கிளின்டன் இது வருத்தமான விஷயம் என்றார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில்,

கானுக்கு மீண்டும் அதன் அணுசக்தி கழகத்தில் வேலை வழங்கப்படாது என பாகிஸ்தான் அமெரிக்க அதிபருக்கம், அரசுக்கும் உறுதியளிக்க வேண்டும்.

அணு ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். அவர் மிகவும் ஆபத்தானவர். அவருக்கும் ஈரான், வடகொரியா நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு சர்வதேச சமூகத்துக்கே ஆபத்தானதாக அமையும்.அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+