அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவோம்: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக கொடி நாளின்போது இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவ தாராளமாக அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து கட்சித் தொண்டர்கள் உதவ வேண்டும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 12-ந் தேதி வியாழக்கிழமை தே.மு.தி.க.வின் கொடி நாளாகும். அன்றைய தினம் கொடிகளை புதுப்பிப்பதும், புதிய இடங்களில் கொடியேற்றுவதும் நாம் வழக்கமாக கொண்டுள்ள நடைமுறையாகும்.
அதற்கேற்ப வருகிற 12-ம் தேதி தமிழ்நாடெங்கும் நமது கொடிகளே இல்லாத இடமில்லை என்று மாற்றாரும் வியக்கத்தக்க வகையில் பட்டிதொட்டியெங்கும் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் இல்லாத அளவு இன்று இலங்கையில் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கிருந்து பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகவும் வந்த வண்ணம் உள்ளனர்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற நம் கொள்கையின்படி, இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு செயல்வீரர்கள் வழங்கி இந்த நாளை சிறப்பிக்க வேண்டுகிறோம் என்று கோரியுள்ளார் விஜயகாந்த்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications