சரத்குமார் கட்சி இன்று சென்னையி்ல் தேர்தல் பணிக்குழு கூட்டம்
சென்னை: நாடளுமன்றத் தேர்தல் பணி குறித்த சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டம் இன்று நடைபெறுவதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் செய்ய வேண்டிய ஆயத்த பணிகளை மேற்கொள்ள கடந்த 4ம் தேதி முதல் மாவட்ட் அணி நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறேன்.
இந்த ஆலோசனை கூட்டம் வரும் 11ம் தேதி வரை நடக்கும்.
சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சி பணியில் தீவிரமாக செயல்படாத சில நிர்வாகிகளை மாற்றி உள்ளோம். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்பநாபனின் பொறுப்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாராமனுக்கும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை அரியலூர் மாவட்ட செயலர் ஜெ.கே.சிவாவும் கவனிப்பார்கள்.
கட்சியின் நிர்வாக வசதிக்காக நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.சுரேஷ்காந்தி, மேற்கு மாவட்ட செயலாளராக கே.சின்னதுரையும் செயல்படுவார்கள்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் மாநில அணி செயலாளர்கள் மற்றும் மாநில அணி துணை செயலாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக செயல்படுத்தவும், மாவட்டங்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கவும், ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications