சென்னை தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை நகரின் மையப் பகுதிகளில் முக்கியமான, அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அங்கு சோதனை அடிப்படையில் வருகிற 14ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படவுள்ளது.
ஒரு மாதத்திற்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும். அதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து அது தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரத்தில் அண்ணாசாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பை சுற்றியுள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து இப்பகுதியில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவின் அடிப்படையிலும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதி கருதி, வாகன போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஒரு மாத காலத்திற்கு பரிட்சார்த்த முறையில் 14.2.2009 காலை 7 மணி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் எல்டாம்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தியாகராயர் சாலை நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. இனி இந்த வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை, விஜயராகவா சாலை மற்றும் நாயர் சாலை வழியாக தியாகராயர் சாலை சென்றடையலாம்.
அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணாசாலையில் வரும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராயர் சாலைக்கு செல்வது தடை செய்யப்படுகிறது.
இனி இந்த வாகனங்கள் அண்ணாசாலை விஜயராகவா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி விஜயராகவா சாலை, நாயர் சாலை வழியாக தியாகராயர் சாலை சென்றடையலாம்.
அண்ணாசாலை - விஜயராகவா சாலை சந்திப்பு மற்றும் விஜயராகவா சாலை வடக்கு போக் சாலை சந்திப்பிற்கும் இடைப்பட்ட விஜயராகவா சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. எனவே விஜயராகவா சாலை வடக்கு போக் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் அண்ணா சாலை நோக்கி விஜயராகவா சாலையில் செல்வது தடை செய்யப்படுகிறது.
இனி இந்த வாகனங்கள் வடக்கு போக் சாலை, தியாகராயர் சாலை வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.
எல்டாம்ஸ் ரோடு - அண்ணா சாலை சந்திப்பிலிருந்து வடக்கு போக் சாலை தியாகராயர் சாலை சந்திப்பை நோக்கி தியாகராயர் சாலையில் வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் வலது புறம் திரும்பி வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலை சந்திப்பை நோக்கிச் செல்வது தடை செய்யப்படுகிறது.
விஜயராகவா சாலை சந்திப்பிலிருந்து வடக்கு போக் சாலை தியாகராயர் சாலை சந்திப்பை நோக்கி வடக்கு போக் சாலையில் வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பனகல் பார்க் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது.
பனகல் பார்க்கிலிருந்து வடக்கு போக் சாலை தியாகராயர் சாலை சந்திப்பை நோக்கி தியாகராயர் சாலையில் வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலை சந்திப்பை செல்வது தடை செய்யப்படுகிறது.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications