8 அதிமுக கவுன்சிலர்கள் நீக்கம்-ஜெ அதிரடி
சென்னை: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடத்து கொண்டதாகக் கூறி கரூர் நகராட்சியைச் சேர்ந்த 7 அதிமுக கவுன்சிலர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சிலர் செயல்பட்டுள்ளனர்.
அவர்கள், கரூர் நகராட்சியைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ், (32-வது வார்டு உறுப்பினர், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்), பி.பூமிநாதன், (கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர்), எஸ்.சீனிவாசன் (27வது வார்டு உறுப்பினர் கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்), பி.ராஜா (3-வது வார்டு உறுப்பினர் கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்), எஸ்.வளர்மதி (2-வது வார்டு உறுப்பினர்), எஸ்.கமலா (7-வது வார்டு உறுப்பினர்), ப.பானுமதி (10-வது வார்டு உறுப்பினர்), இ.முத்துசாமி (29-வது வார்டு உறுப்பினர்), கே.கணேசன் (33-வது வார்டு உறுப்பினர்).
அவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார்கள். கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications