காதல் திருமணம் செய்த ஜோடி படு கொலை-4 பேர் கைது!
கரூர்: கரூர் மாவட்டம், தோகமலை அருகே காதல் திருமணம் செய்த ஜோடி படு கொலை செய்யப்பட்டனர். இந்த படு கொலைக்கு காரணமான 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தோகமலை அருகே உள்ளது தளிஞ்சி. இந்த கிராமத்தில் வசிப்பவர் சின்னத்துரை (45). கூலி தொழிலாளி. இவருக்கு குழந்தையம்மாள் (40) என்ற மனைவியும், நாகலெட்சுமி, செல்வி, பூபதி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். மூத்த மகள் நாகலட்சுமியின் கணவர் ராமு.
சின்னத்துரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள ஒரு கொப்பரை தோங்காய் பண்ணையில் வேலை சேர்ந்தார். இங்கு சின்னத்துரையின் இரண்டு மகள்களும் வேலை செய்து வந்தனர்.
அதே பண்ணையில் காந்தி என்பவரும் வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் காந்திக்கும் பூபதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
காந்தி திருமணமானவர் என்பதால் இந்த காதலுக்கு சின்னத்துரையும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பூபதி தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் காந்தியுடன் காணாமல் போனார். இதனால் மனம் உடைந்த சின்னத்துரை தனது குடும்பத்திருடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் ஒரு நாள் பூபதி தனது காதல் கணவன் நகைகளை வாங்கிக் கொண்டு சித்தரவதை செய்தவதாக தனது தாயருக்கு போன் செய்துள்ளார். அப்போது பூபதியையும், அவரது கணவரையும் தளி்ஞ்சி வருமாறு அவரது தாயார் கூறியுள்ளார். அதன்படி பூபதியும், காந்தியும் தளிஞ்ச்சிக்கு வந்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் இவர்கள் இருவரையும் நடுகாட்டு அழைத்துச் சென்ற ராமுவும் சின்னத்துரையும், காந்தியை அரிவாளால் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. பூபதியையும் அடித்துக் கொன்று விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் பூபதியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காந்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், ஓடைப்பகுதி அருகே புதைக்கப்பட்டதும், பூபதி அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து காந்தி, பூபதி ஆகிய இருவரையும் கொன்ற குற்றத்திற்காக சின்னத்துரை, அவரது மனைவி குழந்தையம்மாள், செல்வி, ராமு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications