கச்சா எண்ணெய் விலை 36 டாலராக சரிவு!
சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 35.94 டாலராகிவிட்டது.
அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருள்களுக்கான நுகர்வோர் தேவை மேலும் மேலும் குறைந்து போய்விட்டதால், இதற்குமேல் இருப்பு வைப்பதில் பயனில்லை என்னும் சூழ்நிலை காரணமாக இந்த விலைக் குறைப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெருகிவரும் வேலையின்மை காரணமாக கேஸோலின் நுகர்வில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்ததை விட நாளொன்றுக்கு 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தேக்கமடைகிறதாம். கடந்த 6 வாரங்களில் மட்டும் 30 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இருப்பில் சேர்ந்துள்ளது.
சர்வதேச அளவிலும் நாளொன்றுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருள்களின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டதால், விலை தானாகவே இறங்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் எண்ணெய் சந்தை நிபுணர்கள்.
இப்படி விலை குறைவது கூட நல்லதுதான். அதிக விலை குறைப்பு காரணமாக, மீண்டும் தேவை அதிகரித்து நிலைமை சரியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications