கசக்கும் சர்க்கரை!
சென்னை: இன்னும் சில தினங்களில் இந்த வசனம்தான் பல வீடுகளில் ஒலிக்கப்போகிறதோ என்னமோ...
நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறையத் தொடங்கியுள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் எந்தப் பொருளுக்கும் விலை குறைவதாய்க் காணோம். கேட்டால் இதுவரை மக்களுக்குத் தெரியாத புதிய பொருளாதார விதிகளை கண்டுபிடித்து விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
கண்ணுக்குத் தெரிந்து இருமடங்கு விலைக்கு விற்கப்படும் அன்றாட உபயோகப் பொருள் வெங்காயம். நான்கு தினங்களுக்கு முன்பு வரை கிலோ 11 ரூபாயாக இருந்தது ரூ.20யைத் தாண்டிவிட்டது.
அடுத்து சர்க்கரையின் விலை மூட்டைக்கு ரூ.400 வரை உயர்ந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு வரை 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரையின் விலை 1,850 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லரை வியாபாரிகள் 16 முதல் 18 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சர்க்கரையை, 23 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பிராண்டட் சர்க்கரைக்கு ரூ.26 வரை விலை வைத்துள்ளனர்.
மழை தவறிப்போய் கரும்பு விளைச்சல் இல்லாததால் நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், அதனால்தான் இவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டுவிட்டதென்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளது இப்படி:
'விரைவில் அமைச்சரவை கூடி, நாட்டின் விலைவாசி மாறுபாடுகள் குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கும்!'
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications