பொறுமையை சோதிக்க வேண்டாம்-தங்கபாலு
சென்னை: எங்களது பொறுமையை மேலும் மேலும் சோதிக்க வேண்டாம். காங்கிரசுக்கு எதிராக இனியும் வன்முறை சம்பவங்கள் தொடருமேயானால், தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமேயானால், காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் வீதிக்கு வந்துபோராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சில சமூக விரோதிகள் சோனியா காந்தி திருவுருவப் படத்தையும், காங்கிரஸ் கொடியையும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். கடுமையான கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரிய அக் குற்றத்தை புரிந்த சமூக விரோதிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் போரால் அப்பாவி தமிழர்கள் அல்லல் படக் கூடாது. அவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2 முறை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசினார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். அங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே அங்கு இருசாராரும் போரை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தமிழர்கள் வாழ்வுரிமைப் பெற அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இதற்குப் பிறகாவது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு துணை நிற்பதற்கு பதிலாக தமிழின துரோகிகள் சிலர் சோனியா காந்தி திருவுருவப் படத்தையும், காங்கிரஸ் கொடியையும் எரிப்பது, காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் செயல்வீரர்களையும் தாக்குவது போன்ற வன்முறை செயல்களில் அங்கும், இங்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் என்றைக்கும் சட்டத்தை மதித்துப் போற்றுகிற பேரியக்கம். என்றாலும் எங்களது பொறுமையை மேலும் மேலும் சோதிக்க வேண்டாம். இனியும் தொடர்ந்து அந்த வன்முறை சம்பவங்கள் தொடருமேயானால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமேயானால் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் வீதிக்கு வந்துபோராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
எனவே இனியாவது வன்முறைச் செயலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தி சட்டம், ஒழுங்கை காத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications