காதலர் தினம் பண்பாட்டுக்கு எதிரானது: பாஜக
சென்னை: தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்க விரும்புவோர், காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து வாழ்ந்து வரும் மூத்தகுடி தமிழ்குடி என்று பேசுகின்றோமே! தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணரா இயல் புடையவள் பாரதத்தாய் என்று பாடுகிறோம்! இவற்றுக்கு என்ன பொருள்?
எது தோன்றியது? எது இன்று வரை வாழ்ந்திருக்கிறது? நாம் தமிழர் அல்லது நாம் இந்தியர் என்று பெருமைப்படும் அடையாளத் தன்மை எது? அதுதான் பண்பாடு அல்லது கலாச்சாரம்.
தமிழ்ப்பண்பாடு என்றாலும் ஹிந்துப் பண்பாடு என்று சொன்னாலும் ஒன்றுதான். அந்தப் பண்பாடு அழிந்தால் நம் அடையாளத்தை நாம் இழந்து விடுவோம். அந்த பண்பாட்டை அழிக்க முயற்சி நடைபெறுகின்றது. துரதிருஷ்டவசமாக பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் அறியாமை காரணமாக மக்களும் துணை போகிறார்கள்.
அதில் ஒரு பகுதி புத்தாண்டு அன்று நள்ளிரவு கேளிக்கைகள், காட்டுக் கூச்சல்கள், வரம்பு மீறல்கள். ஜனவரியில் அது என்றால் பிப்ரவரியில் காதலர் தினம்.
இதை தமிழ்ப் பண்பாட்டை பேணி பாதுகாக்க விரும்புபவர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications