கருணாநிதி பங்கேற்காத பட்ஜெட் கூட்டத் தொடர்
சென்னை: முதுகில் நடந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி 10 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வரும் 17ம் தேதி தொடங்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.
முதுகு வலி காரணமாக கருணாநிதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் குடியரசு தின விழா கொண்டாட்டத்திலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இந் நிலையில் நேற்று அவருக்கு 3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து குறைந்தது 10 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும், அன்றைய தினம் தாக்கலாகும் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்போதும் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், பட்ஜெட் குறித்து அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அவர் மருத்துவமனையி்ல அதிகாரிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications