கோவை-நாகர்கோவில்-தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கோடை காலத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ஏப்ரல் 15, 22, 29, மே 6,13, 20, 27, ஜூன் 3, 10, 17ம் தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்ட்ரலில் (எண்: 0621) இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கோவையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து ஏப்ரல் 14, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16 ஆகிய தேதிகளில் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்: 0622) கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
எழும்பூரில் இருந்து...
எழும்பூரில் இருந்து ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இரவு 10 மணிக்கு கோவைக்கும் (எண்: 0623, கடற்கரை, அரக்கோணம் வழியாக)
கோவையில் இருந்து ஏப்ரல் 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு எழும்பூருக்கும் சிறப்பு ரயில் (எண்: 0624) இயக்கப்படும்.
எழும்பூரில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்: 0601) எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்: 0602) நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மேலும், எழும்பூரில் இருந்து ஏப்ரல் 7, 14, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 6.40 மணிக்கு நாகர்கோவிலுக்கும் (எண்: 0605), நாகர்கோவிலில் இருந்து ஏப் 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24-ந் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு எழும்பூருக்கும் சிறப்பு ரயில் (0606) இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏப்ரல் 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்: 0607) சென்ட்ரலில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரலுக்கு ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (எண்: 0608) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வரும் ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண்: 0609) எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (0610) செங்கோட்டையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
அதே போல், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப்ரல் 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (எண்: 0611) சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்ட்ரலுக்கு ஏப்ரல் 16 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண்: 0612) தூத்துக்குடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
இதே போல, மதுரை-லோக்மானியக் திலக், எர்ணாகுளம்-பெங்களூர், சென்டிரல்-கண்ணூர், சென்டிரல்- மங்களூர், சென்டிரல்-கொல்லம், சென்டிரல்-கொச்சுவேலி ஆகிய இடங்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications