'பாதுகாப்பு வளையத்திலும்' ராணுவம் வெறியாட்டம்-27 பேர் பலி
வன்னி: புதிய பாதுகாப்பு வளையம் என இலங்கை ராணுவம் அறிவித்த பகுதிகளிலும் வெறித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 27 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் இடையூறு செய்கிறார்கள். எனவே பழைய பாதுகாப்பு வளையப் பகுதிகள் கைவிடப்படுகின்றன. புதிய பாதுகாப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தமிழர்கள் வரலாம் என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா நேற்று அறிவித்திருந்தார்.
அப்படி அறிவிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது நேற்று இலங்கைப் படையினர் எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி வெள்ளிக்கிழமை மாலை முதல் 60-க்கும் அதிகமான ஆர்ட்டில்லரி எறிகணைகளை வீசி தாக்குதலை நடத்தினர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர்.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்று இரவு 7.50 மணிக்கு நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதலில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில்
5 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 8 மணியளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
வீதியில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் சிவகுமார் சசிக்குமார் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை 150 பேர் பலி
வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
இலங்கை ராணுவம் சாலைகளில் செல்லும் அப்பாவி மக்களைக் குறி வைத்தே தாக்குதல் நடத்துகிறது. இதனால் சாலையோரம் முழுவம் பிணமயமாக கோரமாக காட்சி அளிக்கின்றன.
தேவிபுரம் முதல் புதுக்குடியிருப்பு வரை சாலையோரம் நெடுகிலும் பிணங்கள் காணப்படுகின்றன. குத்தியிரும், குலையுருமாக காயமடைந்தவர்களும் விழுந்து கிடக்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூட அவகாசம் தராமல், ராணுவம் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கி வருவதால், வேகம் வேகமாக உடல்களைப் புதைக்கும் அவலத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வழியில்லாமல் பரிதவிக்கின்றனர். பலருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே கிடைக்கிறது.
இலங்கை விமானப்படை விமானங்கள் மேலிருந்து வேவு பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதிகளை ராணுவத்திற்கு தெரிவித்து, அதையடுத்து ராணுவம் அங்கு பீரங்கித் தாக்குதலை நடத்தி அப்பாவிகளை கொன்று குவிப்பதாக தமிழர்கள் குமுறுகிறார்கள்.
வன்னி பிராந்தியத்தின் பல குறுகிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. அவை நகர முடியாத அளவுக்கு ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதே இதற்குக் காரணம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications