ஈழத் தமிழர்களின் வரலாறு வட மாநிலத்தவருக்குத் தெரியவில்லை - சரத்குமார்
தென்காசி: ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்ற வரலாறு வட மாநிலத்தவர்களுக்கும், அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் தெரியவில்லை. அதை நான் டெல்லியில் நடைபெறும் எங்களது கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தின்போது விளக்கப் போகிறேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வருகிற 25-ந்தேதி டெல்லியில் எங்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர்கள் இலங்கை பூர்வீக குடிகள்தான் என்பதை விளக்கமாக பேசப்போகிறேன்.
வடமாநில மக்களுக்கும், தலைவர்களுக்கும் அந்த வரலாறு தெரியவில்லை.
வடமாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக கருதவேண்டும் என்று அவர்களிடம் கூறப் போகிறேன்.
பிரியங்கா வந்த பிறகுதான் தாக்குதல் உக்கிரம் ...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை, பிரியங்கா சந்தித்த பிறகுதான் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனவே சிறையில் பிரியங்கா நளினியுடன் என்ன பேசினார் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதை, வன்முறையை நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.
தேசிய கட்சியுடன் கூட்டணி...
40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதுதான் எனது முடிவு. ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மார்ச் 15-ந்தேதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசிய கட்சியுடன் தான் கூட்டணி இருக்கும்.
விரைவில் தமிழக விவசாயிகள் கருத்தரங்கு நடத்த உள்ளோம். எங்கள் கட்சி பூரண மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உள்ளது. இருந்தாலும் பிராந்தியை தமிழக அரசு விற்பனை செய்ய அனுமதித்து உள்ளது.
எனவே, கள் ளை ஒரு விவசாய பொருளாக கருதி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். மதுக்கடைகளை மாலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றார் சரத்குமார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications