மும்பை தாக்குதலை தீவிரவாதிகள் திட்டமிட்ட வீடு கண்டுபிடிப்பு
கராச்சி: பாகிஸ்தானில், மும்பைத் தாக்குதலை தீவிரவாதிகள் உட்கார்ந்து பேசி திட்டமிட்ட வீட்டை கண்டுபிடித்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் ஜியோ டிவி கூறியுள்ளது.
கராச்சி அருகே உள்ள யூசுப் கெளத் என்ற தெருவில் அந்த வீடு இருப்பதாகவும், அங்குதான் தீவிரவாதிகள் கூடி மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் ஜியோ டிவி கூறுகிறது.
அந்த வீட்டில், மீன் பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. லாக்கர்களும், பீரோக்களும் கூட அந்த வீட்டில் உள்ளன. மேலும் வீட்டின் சுவற்றில் ஒரு மேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மும்பைக்கான கடல் மார்க்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்பின் வீட்டையும் பாகிஸ்தான் மீடியாக்கள்தான் கண்டுபிடித்து வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால் கஸாப் பாகிஸ்தானியே அல்ல என்று முதலில் பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. சில நாட்களுக்கு முன்புதான் கஸாப் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து பாகிஸ்தானிதான் கஸாப் என்பதை ஒத்துக் கொண்டது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் கூடி சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் வீடு குறித்த தகவலை பாகிஸ்தான் டிவி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications