Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதுகாப்பு துறைக்கு ரூ. 1,41,703 கோடி நிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. சர்வதேச பொருளாதார சிக்கல்களால் இந்தாண்டு வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனாலும் இது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமான வளர்ச்சியாகும் என்று நிதிமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்:

மழையளவு எதிர்பார்த்த அளவி்ல் இருந்தால் 2009ம் ஆண்டில் விவசாய வளர்ச்சி சிறந்த வகையில் இருக்கும்.

ஆனால், உலக பொருளாதார சூழ்நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2008ம் ஆண்டை விட 2009ம் ஆண்டு மிக மோசமாகவே இருக்கும். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இந்தியா தப்பிவிட முடியாது.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) 7.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் விவசாயம், தொழிற்துறை மற்றும் சேவைத் துறைகளாகும்.

நாட்டின் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை ( Fiscal deficit) 2003-04ம் ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இது 2007-08ம் ஆண்டில் 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த சேமிப்பு விகிதம் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் உணவு உற்பத்தி 2007-08ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 230 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

2003-04ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு நாட்டின் ஏற்றுமதி 26.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல வெளிநாட்டு வர்த்தகம் 23.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல வட்டிக் குறைப்பு, நிதிப் புழக்க சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தன. பணப் புழக்கத்தை அதிகரிக்க 4 பில்லியன் டாலர் வரை சந்தையில் அரசு கூடுதலாகப் புகுந்தியது.

பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மேலும் 9.5 பில்லியன் டாலர்கள் வரை செலவிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் இருந்து கடனாகப் பெறப்படும்.

2009-10ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் ரூ. 9,53,231 கோடி.

இதில் திட்டச் செலவுகள் ரூ. 2,85,149 கோடி. திட்டமி்ல்லா செலவுகள் ரூ. 6,68,082 கோடி

உணவு, உரம், பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கப்படும் மானியத்துக்கான செலவு ரூ. 95,579 கோடி.

2009-10ம் ஆண்டில் வரி மூலமான வருவாய் ரூ. 5,00,096 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 4 சதவீதமாக இருக்கும்.

பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் ரூ. 1,41,703 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 34 சதவீதம் அதிகமாகும்.

வருமான வரி சலுகை ஏமாற்றம்!:

தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பட்ஜெட்டில் பெரிய அளவுக்கு வருமான வரிச்சலுகை அறிவிப்பார்கள் என காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+