தொலைநோக்கற்ற பட்ஜெட்: ஜெ. கருத்து

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பட்ஜெட்டால் ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லை. தமிழக முன்னேற்றத்தின் முதுகெலும்பை முறிக்கக்கூடிய, தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய, தொலைநோக்குப் பார்வையில்லாத, ஆரோக்கியமற்ற நிதிநிலை அறிக்கை இது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தரத்தை உயர்த்தும் பட்ஜெட்-காங்:
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறுகையில், தமிழக பட்ஜெட் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாய கடனுக்கு வட்டி இல்லை என்பது மிக சிறந்த அறிவிப்பு ஆகும். மொத்தத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
ஏறக்குறைய சரியாக உள்ளது!!!!-பாமக:
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்,
பா.ம.க. தயாரித்த நிழல் அறிக்கை வரவு-செலவு திட்டமும் தமிழக அரசு தயாரித்துள்ள வரவு-செலவு திட்டமும் ஏறக்குறைய சரியாக உள்ளது.
வேளாண்மைக்கு தனி வரவு-செலவு திட்டம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நிறை வேற்றப்படவில்லை.
மொத்தத்தில் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
வேதனை வேதனை-மதிமுக:
சட்டமன்ற மதிமுக தலைவர் கண்ணப்பன் கூறுகையில், இந்த பட்ஜெட் ஏழை எளியோர்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வில்லை. இன படுகொலையை கண்டிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மொத்தத்தில் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications