முகர்ஜியிடம் ராமதாஸ்-திமுக கூட்டணி மனு
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழு ஆகியோர் சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.
டாக்டர் ராமதாஸும், துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணைக் குழுவினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று டாக்டர் ராமதாஸ் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விளக்கி மனு ஒன்றை அளித்தார்.
அதேபோல குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை துரைமுருகன் தலைமையிலான குழுவினர் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இன்று டாக்டர் ராமதாஸ் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார்.
ராமதாஸிடம் நாராயணன் விளக்கம்
பின்னர் டாக்டர் ராமதாஸை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக பேசினார்.
அதேபோல, துரைமுருகன் தலைமையிலான குழுவினர் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை இலங்கை விவகாரமாக கருதாமல் நமது நாட்டு விவகாரமாக கருத வேண்டும் என்று கூறி எங்களது உணர்வுகளை, தமிழக மக்களின் உணர்வுகளை சோனியா காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தோம் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications