ஒட்டுகேட்பு-மாஜி முதல்வர் வசுந்தரா மீது புகார்

ராஜஸ்தானின் முதல் பெண் முதலமைச்சர் வசுந்தரா ராஜே. இவர் கடந்த 2003 முதல் 2008 டிசம்பர் வரை முதல்வர் பதவியில் இருந்தவர். இந்நிலையில் அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியடைய தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவர் பதவியில் இருந்த தனது கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்ததாக குற்றம் சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டவுடன் அவரது குட்டு உடைந்துள்ளது. இது குறித்து ஜெய்ப்பூர் ஏடிஜி கன்ஹியா லால் பைர்வா கூறுகையில்,
முன்னாள் அமைச்சர் கிரோரி லால் மீனா, எம்எல்ஏ சுரேந்திர சிங் ரதோர், குஜ்ஜார் தலைவர் பிரகலாத் குன்ஜால், அட்டர்சிங் பதானா என தனக்கு நெருக்கமானவர்களின் அவர் பதிவு செய்து தரும்படி வசுந்தரா ராஜே கேட்டுள்ளார். ஆனால் இது எதற்கும் அவர் எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவு அளிக்கவில்லை.
இந்திய தொலைபேசி சட்டப்படி சிறப்பு காரணங்களுக்காக தொலைபேசி அழைப்பை பதிவு செயயலாம். ஆனால் அதற்கு மாநில உள்துறை செயலரிடம் இருந்து எழுத்து மூலமான உத்தரவு அளிக்கப்பட வேண்டும். அவர் இல்லாத நிலையில் டிஐஜி உத்தரவு பிறப்பித்து உள்துறை செயலரிடம் அடுத்த மூன்று நாட்களுக்குள் கையெழுத்து வாங்கி தர வேண்டும்.
ஆனால் 7 முக்கிய நபரின் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்ய டிஐஜி ஒருவர் வாய்மொழி உத்தரவே வழங்கியுள்ளார். உரிய வகையில் கேட்காதது குற்றம் என்பதை தாண்டி இது சட்டத்துக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என்றார் அவர்.
ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கடாரியா கூறுகையில், இது தொடர்பான எதுவும் எனது மேஜைக்கு வந்தது கிடையாது. அப்படி இருக்கையில் நான் எப்படி கருத்து சொல்ல முடியும் என்றார்.
இதையடுத்து தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் இவ்விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications