திடீர் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
மதுரை: டீசல் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியல் செய்த சுமார் 10,000 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் மறியில் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மதுரையில் சிஐடியு அகில இந்தியச் செயலாளர் உ.ரா.வரதராசன் உட்பட சுமார் ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள், டீசல் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற தொழிலாளர் கடன் தொகையை நிர்வாகம் பிடித்தம் செய்து தருவதை அரசு ரத்து செய்து, கூட்டுறவு நிறுவனங்களை சீர்குலைக்க கூடாது.
போக்குவரத்து கழகங்கள் செயல்படுவதற்கு பள்ளிக் குழந்தைகள் மற்றும் இதர இலவச பயணம் செய்வதையொட்டி ஏற்றுக் கொண்ட 1500 கோடி ரூபாயை தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும்.
ஒப்பந்தப்படி 240 நாட்கள் பணிமுடித்த 15 ஆயிரம் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்று, இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கம்யூடேசன் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications