விமானிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வில் இளவரசர் ஹாரி தோல்வி

இளவரசர் ஹாரி இங்கிலாந்து ராணுவத்தில் இணைந்துள்ளார். தற்போது 2 ஆண்டு பைலட் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அவருக்கு விமானிக்கான தேர்வு தொடங்கியுள்ளது. இதில் முதல் தேர்வில் அவர் தோல்வியடைந்து விட்டார்.
இதனால் ஹாரி மனச் சோர்வடைந்துள்ளாராம். ஹாரிக்கு அடுத்தடுத்து கிடைத்துள்ள 3வது அடி இது.
முதலில் சக ராணுவ வீரரை பாகி என்று அழைத்து ஆசியர்களின் கோபத்துக்கு ஆளானார். பின்னர் அவரது நீண்ட நாள் காதலியான செல்சி டேவி, ஹாரியை விட்டு கடந்த மாதம் பிரிந்தார். இப்போது விமான பயிற்சித் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ராணுவ அதிகாரிகள் கூடுதல் பயிற்சி கொடுக்கவுள்ளனர். இதன் மூலம் அடுத்த தேர்வில் அவர் வெற்றி பெறலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லிங்கன்ஷயர் விமான தளத்தில் நடந்த எழுத்துத் தேர்வில் ஹாரி தோல்வியடைந்து விட்டாலும் கூட அதில் தேறி விட அவருக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன என்று ராயல் ஏர் ஃபோர்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஹாரிக்கு கூடுதல் டியூஷன் வகுப்புகள் நடைபெறவுள்ளனவாம்.
ஹாரிக்கு, அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த வேண்டும் என்பதே கனவாக உள்ளது. அதிலும் போர் முனையில் அந்த ஹெலிகாப்டர்களை செலுத்த வேண்டும் என்றும் தீவிரமாக உள்ளார்.
ஒரு வேளை அவர் விமானிக்கான தேர்வில் வெற்றி அடைந்தாலும் கூட, அவருக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த அனுமதி கிடைக்காதாம். சாதாரண ரக லிங்க்ஸ் அல்லது கெஸல் ரக ஹெலிகாப்டர்களே முதலில் தரப்படுமாம். அவரது செலுத்தும் திறனைப் பொறுத்தே பிற ஹெலிகாப்டர்களைத் தருவார்களாம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications