கர்நாடகத்தில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு-கருத்துக் கணிப்பு

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி- சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் பாஜகவுக்கு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள ஆதரவு கணிசமாக உயர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.
இப்போது அங்கு மக்களவைத் தேர்தல் நடந்தால் பாஜக 39 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 35 சதவீத வாக்குகளையும், கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 15 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 சதவீத வாக்குகளையும் பெறும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இது கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 4 சதவீத வளர்ச்சியாகும். காங்கிரஸ் 1 சதவீத வாக்குகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 5 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளன.
பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் முன் உள்ள ஒரே வழி தேவெ கெளடாவுடன் கூட்டணி சேருவது தான். ஆனால், தான் 2 இடத்தில் வென்றால் கூட போதும்.. காங்கிரஸ் வென்றுவிடக் கூடாது என்ற நிலையில் இருக்கிறார் கெளடா.
ஆனால், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற மூடில் உள்ளார்.
ஆனால், கூட்டணி என்று வந்தால் காங்கிரசிடம் பாதிக்குப் பாதி இடங்களையாவது கேட்டு கெளடா தொல்லை தருவார் என்பது மட்டும் நிச்சயம்.
மேலும் கெளடாவுடன் கூட்டணி கூடாது என்று சமீபத்தில் காங்கிரசில் இணைந்த முன்னாள் துணை முதல்வரான சித்தராமையா கூறி வருகிறார். கெளடாவின் முன்னாள் வலதுகரமான இவருக்கு மைசூர் பகுதியில் பெரும் செல்வாக்கு உண்டு. பிற்பட்ட குருபா சமூகத்தினரின் வாக்குகளை அள்ள இவரையே காங்கிரஸ் நம்பியுள்ளது.
இவரை சமாதானப்படுத்தினாலும் கெளடாவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு கூட்டணி அமைபபது என்பது காங்கிரசக்கு பெரும் தலைவலியாகவே இருக்கும். இதனால் தான் இதுவரை கெளடாவுடன் கூட்டணி என்பதில் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.
இந்தக் கூட்டணி வராமல் மும்முனைப் போட்டி வந்தால் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் பெரும்பாலானவற்றை பாஜக அப்படியே அள்ளிச் சென்றுவிடும் என்பதை கருத்துக் கணிப்பு உறுதி செய்துள்ளது.
மேலும் பாஜக ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்த முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லிங்காயத்துகள் (முதல்வர் எதியூரப்பாவும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான்) மத்தியில் பாஜகவுக்கு மேலும் ஆதரவு அதிகரித்துள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இத்தோடு வழக்கமாக காங்கிரசுக்கு வாக்களின் தலித்துகளின் வாக்குகளையும் பாஜக கவர ஆரம்பித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக இடங்களைப் பிடிக்கும் நிலையில் உள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications