சோனியா கைவிரித்து விட்டார் - பிரணாப் பதில் ஏமாற்றம்: போராட்டம் தொடரும் - ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சோனியா கைவிரித்து விட்டார் - பிரணாப் பதில் ஏமாற்றம்: போராட்டம் தொடரும் - ராமதாஸ்

டெல்லி: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது பதில் திருப்தி தரவில்லை. ஏமாற்றமளிக்கிறது. சோனியா காந்தியும் கைவிரித்து விட்டார். எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

டெல்லி சென்றிருந்த டாக்டர் ராமதாஸ் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசினார். அப்போது, இதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் பேசுங்கள் என்று சோனியா அறிவுறுத்தினார்.

இதையடுத்து நேற்று பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார் ராமதாஸ். முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், ராமதாஸை சந்தித்து இலங்கை குறித்து விளக்கினார்.

பிரணாப் முகர்ஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ், பிரணாப் பேச்சு தனக்கு திருப்தி தரவில்லை, பெரும் ஏமாற்றத்தையே அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் கைவிரித்து விட்டார் எனவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனையும் நான் சந்தித்து இலங்கை பிரச்சினை பற்றி பேசினேன். அவர்களுடைய பதில் சாதகமாக இருந்தது.

பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினேன். இலங்கையில் நடக்கும் போரை பற்றியும் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதையும் விளக்கி அவரிடம் 5 பக்க கோரிக்கை மனுவை கொடுத்தேன்.

எங்களை பொறுத்த வரை இலங்கையில் ராஜபக்சே அரசு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் உடனே போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அந்த போர்நிறுத்தத்துக்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பிரணாப் பதில் ஏமாற்றம்

ஆனால் இப்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்த வழியில்லை என்று பிரணாப்முகர்ஜி கூறினார். அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பா.ம.க. சார்பில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

கைவிரித்து விட்டார் சோனியா

இந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய டாக்டர் ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் ராணுவ ஆட்சி அமைக்க சதி நடக்கிறது என சோனியா காந்தியிடம் கூறியதற்கு அது அவர்கள் நாட்டின் உள்பிரச்சினை. இதில் எப்படி தலையிடுவது என கூறி கைவிரித்து விட்டார்கள்.

போராட்டம் தொடரும்

எனவே மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளோம். இன்று பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் பா.ம.க. எம்.பி.க்கள் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+